இந்தியா டுடே கான்க்ளேவ் சவுத்தில் பினராயி விஜயன், அசாதுதீன் ஒவைசி பங்கேற்பு : தென்மாநிலங்களின் பெருமைகளை பறைசாற்றும் வகையில்கான்க்ளேவ் சவுத் நிகழ்ச்சி
Jun 1 2023 5:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியா டுடே நடத்தும் கான்க்ளேவ் சவுத் 2023 நிகழ்ச்சியில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், எம்பியும், ஏஐஎம்ஐஎம் தலைவருமான அசாதுதீன் ஒவைசி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அரசியல், வணிகம், சினிமா, விளையாட்டு என தென் மாநிலங்களின் பெருமையை பறைசாற்றும் விதமாக இந்தியா டுடே கான்க்ளேவ் சவுத் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. 5வது முறையாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பினராயி விஜயன், அசாதுதீன் ஒவைசி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களுடன், நடிகர்கள் கமல்ஹாசன், ராணா டகுபதி, நடிகைகள் சோபிதா துலிபாலா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.