திரிபுரா சட்டமன்றத்தில் அமர்ந்து ஆபாச படம் பார்த்த பாஜக எம்.எல்.ஏ : விடியோ வைரலான நிலையில் விளக்கம் கேட்டு பாஜக தலைமை நோட்டீஸ்
Mar 30 2023 6:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திரிபுரா சட்டமன்ற கூட்டதொடரில் செல்போனில் ஆபாச படம் பார்த்த பாஜக எம்.எல்.ஏ-வின் வீடியோ வெளியாகி விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. பாக்பாசா சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஜாதவ் லால், திரிபுரா மாநில சட்டமன்ற கூட்ட தொடரில், சபாநாயகர் மற்றும் மற்ற உறுப்பினர்கள் பேசிக்கொண்டு இருந்த போது செல்போனில் ஆபாச படம் பார்த்துள்ளார். இதனை சிலர் வீடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் திரிபுரா மாநில பாஜக தலைமை விளக்கம் கேட்டு சட்டமன்ற உறுப்பினர் ஜாதவ் லால் நாத்-க்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளனர்.