பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 1-ம் தேதி போபால் செல்கிறார் : வந்தே பாரத் ரயில் தொடக்க விழா மற்றும் ராணுவத் தளபதிகள் மாநாட்டில் பங்கேற்பு
Mar 30 2023 4:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வந்தே பாரத் ரயில் தொடக்கவிழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வரும் 1ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மத்தியப்பிரதேச மாநிலம் போபாலுக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் ஒருங்கிணைந்த ராணுவத் தளபதிகள் மாநாட்டில் அவர் கலந்து கொள்கிறார். 3 நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில், முப்படைகளின் தளபதிகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். போபால் - டெல்லி இடையே, நாட்டின் 11வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை போபாலில் உள்ள ராணி கம்லாபதி ரயில் நிலையத்தில் இருந்து பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.