மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் அமைப்பதை தடுத்து நிறுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு - கடல் வளத்தை பாதுகாக்க வேண்டும் என மீனவர்கள் மனுத்தாக்கல்
Feb 8 2023 2:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திமுக அரசு மெரினா கடற்கரையில் பேனா நினைவுச்சின்னம் அமைக்க எடுத்து வரும் முயற்சிகளை தடுத்து நிறுத்த கோரி உச்சநீதிமன்றத்தில் மீனவர்கள் சார்பில் இன்று பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. சட்டவிதிமுறைகளை மீறி கடலில் சிலை அமைத்தால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு சுற்றுச்சூழலுக்கும் கேடு விளையும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே திமுக அரசின் இந்த முயற்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பேனா சிலை அமைப்பதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் வலுத்து வரும் போதிலும் கடலில் பேனா சின்னம் அமைக்கும் முயற்சியில் திமுக தொடர்ந்து முனைப்பு காட்டி வருகிறது.