தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மகளின் ஆடிட்டர் கைது
Feb 8 2023 10:44AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுபான கொள்கை ஊழல் தொடர்பான வழக்கில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மகளும், பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சி தலைவருமான கவிதாவின் ஆடிட்டர் கைது செய்யப்பட்டுள்ளார். கவிதாவின் ஆடிட்டரான Butchibabu Gorantla-விடம் சிபிஐ அதிகாரிகள் தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக கவிதாவிடம் சிபிஐ அதிகாரிகள் ஏற்கெனவே விசாரணை நடத்தி இருக்கும் நிலையில், தற்போது அவரது ஆடிட்டரிடம் நடத்தப்படும் விசாரணையால் ஐதராபாத்தில் மீண்டும் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.