மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி இன்று பதிலுரை - அதானி குழும முறைகேடு விவகாரத்தில் நாடாளுமன்றம் களேபரமாகியுள்ள சூழலில் இன்று உரை நிகழ்த்துகிறார்
Feb 8 2023 10:38AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி இன்று உரை நிகழ்த்துகிறார். பட்ஜெட் கூட்டத்தொடரின்போது எதிர்க்கட்சிகள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு இதில் அவர் பதில் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது நேற்று விவாதம் நடைபெற்றது. அப்போது இந்திய தொழிலதிபர் அதானியின் சொத்து மதிப்பு தொடர்பாக எதிர்க்கட்சிகள் சார்பில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி பேசும்போது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில் பிரதமர் மோடி உரை நிகழ்த்துவதால் இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.