கர்நாடகாவில் மார்க்கெட் பகுதியில் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய ரவுடி - போலீசாரின் எச்சரிக்கையை மீறியதால் காலில் சுட்டு பிடித்த காவல்துறை
Feb 6 2023 3:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கர்நாடக மாநிலம் கல்புர்கி நகர் மார்க்கெட் பகுதியில் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய ரவுடியை போலீசார் சுட்டுப்பிடித்தனர். கல்புர்கி நகர மார்க்கெட் பகுதியில் ஞாயிறு அன்று இரவு 9 மணிக்கு இந்த சம்பவம் நிகழ்ந்தது. அங்கு கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய அப்துல் என்ற ரவுடியை சரணடையுமாறு போலீசார் பல முறை எச்சரித்தனர். ஆனால் போலீசாரின் எச்சரிக்கையை மதிக்காத ரவுடியின் காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். சுருண்டு விழுந்த ரவுடியை போலீசார் சுற்றி வளைத்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின.