கேரள பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் மீது கூடுதல் வரி விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு - போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரசார் கைது
Feb 4 2023 2:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரசாரை போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர். கேரள பட்ஜெட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் மீது கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளதால் அம்மாநில மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க எந்த அறிவிப்பும் இல்லை என கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டிய நிலையில், அக்கட்சி ஆளும் மாநிலத்திலேயே பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளதை எதிர்த்து காங்கிரசார் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கொச்சியில் உள்ள எர்ணாகுளம் விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு எதிராக இளைஞர் காங்கிரஸ் கருப்புக்கொடி போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரசாரை போலீசார் கைது செய்தனர்.