ஜம்மு காஷ்மீரில் சென்ட் பாட்டிலில் திரவ வடிவில் வெடிகுண்டு வைத்திருந்த நபர் கைது - அரசு பள்ளியில் ஆசிரியராக இருந்து தீவிரவாதியாக மாறியது விசாரணையில் அம்பலம்
Feb 4 2023 2:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முதல் முறையாக சென்ட் பாட்டிலில் திரவ வடிவில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்த அதிர்ச்சி சம்பவம் ஜம்மு காஷ்மீரில் நடந்துள்ளது. வாசனைத் திரவிய பாட்டிலைத் திறந்தால் குண்டு வெடிக்கும்படி திரவ வெடிகுண்டுடன் நடமாடிய ஆரிஃப் என்ற நபரை ஜம்மு காஷ்மீர் போலீசார் கைது செய்துள்ளனர். அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி தீவிரவாத செயல்களில் ஆரிஃப் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். ஜம்மு காஷ்மீரின் வைஷ்ணவி தேவி கோயிலுக்கு யாத்திரை மேற்கொண்ட பக்தர்கள் பேருந்து குண்டுவைத்து தகர்க்கப்பட்ட சம்பவத்தில் ஆரிஃப்புக்கு தொடர்பு இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.