பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தலா 100 மரக்கன்றுகள் : சிக்கிம் அரசின் புதிய பசுமை முயற்சி
Feb 4 2023 2:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிக்கிம் மாநிலத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 100 மரக்கன்றுகள் நட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. மரம் ஒன்றை நடுங்கள், பாரம்பரியம் ஒன்றை விட்டுச் செல்லுங்கள் என்ற இத்திட்டத்தை சிக்கிம் முதலமைச்சர் பிரேம் சிங் தமாங் தொடங்கிவைத்தார். குழந்தைப் பிறப்பை நினைவுகூரும் விதமாக இவ்வாறு மரக்கன்றுகள் நடுவது, குழந்தை, பெற்றோர் மற்றும் இயற்கைக்கு இடையிலான பிணைப்பை வலுப்படுத்தும் என்று அவர் தெரிவித்துள்ளார். ஒரு குழந்தை வளர வளர, அதற்காக நடப்பட்ட மரங்களும் வளர்வதைக் கவனிப்பது, பூமிக்கு ஒரு குழந்தையின் வருகையை வரவேற்கும் மற்றும் அதை கொண்டாடும் நல்லதொரு அடையாளம் என்று கூறியுள்ளார். இது போன்ற ஒரு பசுமை முயற்சி, இந்தியாவிலேயே முதல்முறையாக சிக்கிமில்தான் மேற்கொள்ளப்படுவதாகவும் முதலமைச்சர் பிரேம் சிங் தமாங் குறிப்பிட்டுள்ளார்.