கேரள பட்ஜெட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் மீது கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி
Feb 4 2023 1:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரள பட்ஜெட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் மீது கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளதால் அந்த மாநில மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கேரள மாநில பட்ஜெட்டை அந்த மாநில நிதி அமைச்சர் கே.என்.பாலகோபால் தாக்கல் செய்தார். அதில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான செஸ் வரி உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் லிட்டருக்கு 2 ரூபாய் உயர்ந்துள்ளது. மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க எந்த அறிவிப்பும் இல்லை என கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டிய நிலையில், அந்த கட்சி ஆளும் மாநிலத்திலேயே பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.