இந்தியாவில் 3 ஆண்டுகளில் 1,46,316 குழந்தைகளை காணவில்லை : 1,28,667 குழந்தைகள் இதுவரை மீட்கப்பட்டதாக மத்திய அரசு தகவல்
Feb 4 2023 12:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவில் காணாமல் போன குழந்தைகளின் எண்ணிக்கை
ஒரு லட்சத்து 40 ஆயிரம் என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விகளுக்கு எழுத்து மூலம் பதிலளித்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி, நாடு முழுவதும் 2020 ஜனவரி 1 முதல் 2022 டிசம்பர் 31ம் தேதி வரை ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 316 குழந்தைகள் காணாமல் போனதாகவும், அதில் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 667 குழந்தைகள் மீட்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதே ஆண்டில் தமிழகத்தை பொறுத்தவரை காணாமல் போன ஆயிரத்து 427 குழந்தைகளில் ஆயிரத்து 6 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடப்பட்டுள்ளார்.