வெளிநாட்டு சிறைகளில் 8 ஆயிரம் இந்தியர்கள் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர் : நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்
Feb 4 2023 12:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வெளிநாட்டு சிறைகளில் 8 ஆயிரம் இந்தியர்கள் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர் என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. நடைபெற்று வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மக்களவை உறுப்பினர்கள் வெளிநாட்டு சிறைகளில் உள்ள இந்திய பிரஜைகளின் எண்ணிக்கை தொடர்பாகவும், அவர்களை விடுதலை செய்து இந்தியா அழைத்து வருவதற்கு தேவையான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளதா என்பது குறித்தும் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்த மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளிதரன், 82 நாடுகளில் 8 ஆயிரத்து 343 இந்தியர்கள் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றும், இவர்களை வெளிநாட்டு சிறைகளிலிருந்து விடுவிக்க கூடிய முயற்சியாக ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், பிரான்ஸ் உள்ளிட்ட 31 நாடுகளிடம் இந்தியா உடன்படிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.