ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட விரிசல் காரணமாக நீர்நிலை ஓரமாக இருந்த கட்டடம் இடிந்து விழுந்து விபத்து - முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டதால் உயிர் சேதம் தவிர்ப்பு
Feb 4 2023 12:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜம்மு காஷ்மீரின் தோடா நகருக்கு அருகே 20க்கும் மேற்பட்ட கட்டங்களில் விரிசல் ஏற்பட்டு சரிந்து விழுந்த நிலையில், நேற்றிரவு மீண்டும் ஒரு கட்டடம் சரிந்துள்ளதால் அப்பகுதியில் சிவப்பு வண்ண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள கட்டடங்களில் கடந்த டிசம்பர் மாதம் முதல் விரிசல் ஏற்பட்டு வருவதாகவும், இதனால் இருபதுக்கும் மேற்பட்ட கட்டடங்கள் ஏற்கெனவே சரிந்து விழுந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மசூதிகள், மதரஸாக்கள் செயல்பட்டு வந்த கட்டடங்களிலும் இது போல் விரிசல் ஏற்பட்டதால் இதுவரை 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஏற்கெனவே இமயமலை அடிவாரத்தில் உள்ள ஜோஷிமட்டில் 180 வீடுகளில் விரிசல் ஏற்பட்டு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தோடாவில் இது போல் கட்டடங்களில் விரிசல் ஏற்படுவது பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.