மக்களின் கண்களை திறக்கும் வகையில் இந்திய ஒற்றுமை யாத்திரை அமைந்தது : கொட்டும் பனிமழைக்கிடையே ராகுல் காந்தி உரை
Jan 30 2023 2:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மக்களின் நம்பிக்கைதான் இந்திய ஒற்றுமை யாத்திரையின் தூண்டுகோல் என்றும், மக்களின் கண்களை திறக்கும் வகையில் நடைபயணம் அமைந்ததாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஸ்ரீநகரில் நடைபெற்ற இந்திய ஒற்றுமை யாத்திரை விழாவில் கொட்டும் பனிக்கு இடையே ராகுல் காந்தி உரையாற்றினார். இந்த நடை பயணத்தில் அனைத்து பிரிவு மக்களையும் சந்தித்ததாக கூறினார். ஒரு நாளைக்கு 6 முதல் 7 மணி நேரம் நடந்தது கடினமாக இருந்ததாகவும், ஆனால் பயணத்திற்கு இடையே ஒருநாள், சிறுமி ஒருவர் தன்னிடம் அளித்த கடிதத்தின் மூலம் அனைத்து வலிகளும் பறந்துசென்று விட்டதாகவும் தெரிவித்தார். தனக்காகவும், தன் எதிர்காலத்திற்காகவும் நடை பயணம் மேற்கொண்டுள்ளதற்கு நன்றி என சிறுமி அளித்த கடிதத்தில் எழுதியிருந்ததாக ராகுல் காந்தி கூறினார்.