நவம்பர் மாதத்தில் ஒரு லட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி. வசூல் - தொடர்ந்து 9-வது மாதமாக ஜி.எஸ்.டி. வசூல் அதிகரித்து வருவதாக மத்திய நிதியமைச்சகம் தகவல்
Dec 2 2022 8:09AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நவம்பர் மாதத்தில் ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 867 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி வசூலாகி உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நவம்பர் மாத மொத்த ஜி.எஸ்.டி வருவாயில், மத்திய ஜி.எஸ்.டி. 25 ஆயிரத்து 681 கோடி ரூபாயும், மாநில ஜி.எஸ்.டியாக 32 ஆயிரத்து 651 கோடி ரூபாயும் ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டியாக 77 ஆயிரத்து 103 கோடி ரூபாயும் வசூலிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து 9-வது மாதமாக ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஜி.எஸ்.டி. வசூலாகி இருப்பதாகவும் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தை விட இந்த ஆண்டு நவம்பரில் 11 சதவீதம் கூடுதலாக வரி வசூலாகி உள்ளது.