குஜராத் சட்டப்பேரவை தேர்தலையொட்டி அகமதாபாத்தில் பிரதமர் மோடி திறந்த ஜீப்பில் சென்று பிரசாரம் - 50 கிலோ மீட்டர் தூரம் பயணித்த பிரதமருக்கு வழிநெடுகிலும் பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
Dec 2 2022 7:09AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிரதமர் மோடி பேரணியாக சென்று பிரச்சாரம் செய்தார். குஜராத் மாநிலத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு அமைதியான முறையில் நிறைவடைந்தது. இந்நிலையில், 2ம் கட்ட பிரச்சாரத்தை தொடங்கிய பிரதமர் மோடி திறந்த வெளி வாகனத்தில் சாலை மார்கமாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பிரதமர் மோடிக்கு வழியெங்கும் பாஜக தொண்டர்களும், பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். 16 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி வகையில் பேரணி அமைந்துள்ளது. சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவிலான சாலை மார்க்கமாக பிரதமர் மோடி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.