டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையைப் பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி... இன்றுமுதல் வாரத்தில் 5 நாட்கள் கண்டுரசிக்க ஏற்பாடு
Dec 1 2022 1:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையை பார்வையிட இன்று முதல் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வாரத்தில் திங்கள், செவ்வாய் மற்றும் அரசு விடுறை நாட்களை தவிர்த்து மற்ற நாட்களில் குடியரசுத் தலைவர் மாளிகையை, முன்பதிவு செய்து பார்வையிடலாம். குடியரசுத் தலைவர் மாளிகையின் அருங்காட்சியக வளாகத்தை திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்களை தவிர்த்து அனைத்து நாட்களிலும் பார்வையிடலாம். காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரையும் பார்வையாளர்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை தோறும் நடைபெறும் குடியரசுத் தலைவரின் மெய்காவலர்கள் மாறும் நிகழ்ச்சியையும் மக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.