புதுச்சேரி: நகைக் கடையில் 3 சவரன் தங்கக் காசுகள் திருட்டு - திருச்சியை சேர்ந்த தாயும் மகனும் கைது
Nov 25 2022 4:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரி நகை கடை ஒன்றில் 3 சவரன் மதிப்புள்ள தங்கக் காசுகளை திருடிச் சென்ற பெண்ணையும் அவரது மகனையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். நகரப் பகுதியில் உள்ள செட்டி தெருவில் ராஜா என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். அங்கு வந்த ஒரு பெண்ணும், ஆணும் நகை வாங்குவதுபோல் நடித்து கடை ஊழியரின் கவனத்தை திசைதிருப்பி, ஒரு லட்சம் மதிப்புள்ள தங்கக் காசுகளை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் புதுச்சேரி போலீசார் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து, அந்தப் பெண்ணின் புகைப்படத்தை தமிழக போலீசாருக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியை சேர்ந்த செல்வியும் அவரது மகன் பாலகுமரனும் நகை திருட்டில் ஈடுபட்டது என தெரிய வந்தது. அவர்களை கைது செய்த போலீசார், புதுச்சேரி அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.