மகாராஷ்டிரா, ஒடிஷா உள்ளிட்ட 6 மாநிலங்களில் வரும் நவம்பர் 3-ம் தேதி இடைத்தேர்தல் : தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Oct 3 2022 4:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

மகாராஷ்டிரா, ஒடிஷா உள்ளிட்ட 6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் வருகிற நவம்பர் 3-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மகாராஷ்டிரா, பீகார், ஒடிசா, தெலங்கானா, உத்தரபிரதேசம் மற்றும் அரியானா ஆகிய 6 மாநிலங்களில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் நவம்பர் 3-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்றும், நவம்பர் 6-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இடைத்தேர்தல் குறித்த அதிகாரப்பூர்வ அரசு அறிக்கை அக்டோபர் 7-ம் தேதி வெளியிடப்படும் என்றும், தேர்தல் நடைபெறும் அந்தந்த தொகுதிகளில் நடத்தை விதிமுறைகள் அதே நாளில் அமலுக்கு வரும் எனவும் தேர்தல் ஆணையம் தெரி​வித்துள்ளது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசிநாள் அக்டோபர் 14 ஆம் தேதி. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை அக்டோபர் 15ஆம் தேதி நடைபெற உள்ளது. வேட்புமனுவை வாபஸ் பெற அக்டோபர் 17 கடைசி நாளாகும்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00