2ம் கட்ட யாத்திரை முடிவில் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் தொண்டர்களிடையே உரையாற்றிய ராகுல்காந்தி - கர்நாடகாவின் மைசூரு நகரிலிருந்து இன்று முதல் பாத யாத்திரை
Oct 3 2022 10:35AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கர்நாடகாவின் மைசூரு நகரிலிருந்து ராகுல் காந்தி தனது ஒற்றுமை யாத்திரை பயணத்தை இன்று காலை தொடங்கினார்.
கன்னியாகுமரி தொடங்கி காஷ்மீர் வரை சுமார் 3 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பாதயாத்திரை பயணத்தை தொடங்கியுள்ளார். தமிழகம், கேரள மாநிலங்களை தொடர்ந்து அவரது பயணம் கர்நாடகாவில் நடைபெற்று வருகிறது. அம்மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், மூத்த தலைவர்கள், ஏராளமான தொண்டர்கள் ராகுல் காந்தியுடன் செல்கிறார்கள். இன்று மாலை வரை சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவுக்கு இந்த யாத்திரை நடைபெறுகிறது. அம்மாநிலத்தில் சுமார் இரண்டு வார காலத்திற்கு இந்த யாத்திரை நீடிக்கும் என தெரிகிறது. இதில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரும் பங்கேற்க இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.