சுதந்திர தின விழாவை சீர்குலைக்கும் வகையில் தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவ வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானதன் எதிரொலி - மாநிலம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மும்முரம்

Aug 14 2022 4:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

சுதந்திர தின விழாவை சீர்குலைக்கும் வகையில், தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவ வாய்ப்பு உள்ளதாக வெளியான தகவலையடுத்து, மாநிலம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

நாட்டின் 75-வது சுதந்திர தின விழா, நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை சீர்குலைக்கும் வகையில், தமிழகத்திற்குள் தீவிரவாதிகள் ஊடுருவ வாய்ப்புள்ளதாக வெளியான தகவலையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள், கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் மற்றும் முக்‍கிய இடங்களில் போலீஸ் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் வாகன சோதனையும் நடைபெற்று வருகிறது.

ஹோட்டல்கள், விடுதிகள் ஆகியவற்றில் போலீசார் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். சந்தேகப்படும் வகையில் தங்கியிருக்கும் நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில், 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு, வரும் 20-ம் தேதி வரை நீடிக்கும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். விமான நிலையத்துக்கு வரும் பயணிகள், பல கட்ட சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். பாதுகாப்பு கருதி, உள்நாட்டு விமானப் பயணிகள் 2 மணி நேரத்துக்கு முன்னதாகவும், சர்வதேச பயணிகள் 3 மணி நேரத்துக்கு முன்னதாகவும் வருமாறு விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

சென்னை கோட்டையிலும், ஐந்தடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கோட்டையைச் சுற்றியுள்ள, மெரினா கடற்கரை உள்ளிட்ட பகுதிகள், போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வெடிகுண்டு தடுப்பு போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவிகளை கொண்டு பாலம் முழுவதும் கண்காணித்து வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00