மகாராஷ்ட்ர சட்டப்பேரவையின் புதிய சபாநாயகரானார் பா.ஜ.க.வின் ராகுல் நார்வேகர் - சபாநாயகர் தேர்தலில் சிவசேனா வேட்பாளர் தோல்வி

Jul 3 2022 3:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

மகாராஷ்ட்ரா சட்டப்பேரவையின் புதிய சபாநாயகராக பா.ஜ.க.வைச் சேர்ந்த திரு.ராகுல் நார்வேகர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்ட்ராவில் உத்தவ் தாக்‍கரே தலைமையிலான சிவசேனா அரசு கவிழ்ந்ததைத் தொடர்ந்து, பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்‍கள் 105 பேர் மற்றும் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்‍கள் 39 பேரின் ஆதரவுடன், புதிய முதலமைச்சராக திரு.ஏக்‍நாத் ஷிண்டே பதவியேற்றுக்‍கொண்டார். துணை முதலமைச்சராக திரு.தேவேந்திர பட்னவிஸ் பொறுப்பேற்றார்.

இந்நிலையில், மகாராஷ்ட்ர சட்டப்பேரவைக்‍கு புதிய சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. இதில், மும்பை கொலபா சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க. உறுப்பினர் திரு.ராகுல் நார்வேகர் 164 வாக்‍குகள் பெற்று சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சிவசேனா எம்.எல்.ஏ. ராஜன் சால்விக்‍கு 107 வாக்‍குகள் மட்டுமே கிடைத்தன. புதிய சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட ராகுல் நார்வேகரை, முதலமைச்சர் திரு.ஏக்‍நாத் ஷிண்டே அவரது இருக்‍கையில் அமர வைத்தார்.

கடந்த 2019ம் ஆண்டு பா.ஜ.க.வில் இணைந்த ராகுல் நார்வேகர், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராம்ராஜே நாயக்‍ நம்பல்கரின் மருமகன் ஆவார்.

இதனிடையே, ஏக்‍நாத் ஷிண்டே அரசு மீதான நம்பிக்‍கை வாக்‍கெடுப்பு மகாராஷ்ட்ர சட்டப்பேரவையில் நாளை நடைபெறுகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00