இந்தியாவில் மதரீதியாக நடைபெறும் நிகழ்வுகள் கவலை அளிக்கிறது : சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க தூதர் பேச்சு
Jul 2 2022 3:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவில் மதரீதியாக நடைபெறும் நிகழ்வுகள் கவலை அளிப்பதாக சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க தூதர் ரஷாத் உசேன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச மத சுதந்திர மாநாட்டில் உரையாற்றிய சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க தூதர் ரஷாத் உசேன், இந்தியாவில் உள்ள ஏராளமான மத குழுக்கள் குறித்து அமெரிக்கா கவலை கொள்வதாகவும், இந்தியாவில் குடியிரிமைச் சட்டம், ஹிஜாப் தடை, வீடுகள் இடிப்பு என பல்வேறு நடவடிக்கைகள் கவலை அளிப்பதாகவும் தெரிவித்தார். உலகில் உள்ள அனைத்து மதத்தினரின் சுதந்திரத்தை காப்பது அவசியம் என்ற ரஷாத் உசேன், உதய்பூரில் டெய்லர் கொல்லப்பட்டதற்கும் கண்டனம் தெரிவித்தார். இந்தியாவில் அன்றாட நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அதன் மதிப்புகள் காக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.