மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்‍கி உயிரிழந்தவர்களில் 24 பேரின் சடலங்கள் மீட்பு : பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண தொகை

Jul 2 2022 3:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்‍கி உயிரிழந்தவர்களில் 24 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. நிலச்சரிவில் சிக்கி பலியானோர் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண தொகை அறிவிக்‍கப்பட்டுள்ளது.

மணிப்பூரின் நோனி மாவட்டத்தில் துபுல் யார்டு பகுதி அருகே ரயில்வே கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக ராணுவ வீரர்கள் அங்கு முகாம் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு அங்கு நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், முகாம்களில் தூங்கிக் கொண்டிருந்த ராணுவ வீரர்கள், தொழிலாளர்கள் என சுமார் 100 பேர் மண்ணில் புதைந்தனர். இவர்களை மீட்கும் பணியில், ராணுவம், அசாம் ரைபிள்ஸ் படை, மணிப்பூர் பிராந்திய வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். நிலச்சரிவில் ராணுவ வீரர்கள் உள்பட 80-க்‍கும் மேற்பட்டோர் பலியாகியிருக்‍கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரை 24 உடல்கள் மட்டும் மீட்கப்பட்டுள்ளதாகவும், மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. மணிப்பூரில் தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக மீட்பு பணிகள் முடிய இன்னும் 2 அல்லது 3 நாட்களாகலாம் என்றும், பலியானோர் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்கப்படும் என்றும் அம்மாநில முதலமைச்சர் திரு. பைரன்சிங் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00