மகாராஷ்ட்ராவில் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 16 பேரை, 11-ம் தேதி வரை தகுதி நீக்கம் செய்யக்கூடாது : 39 எம்.எல்.ஏ.க்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவு
Jun 28 2022 7:56AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மஹாராஷ்டிரா அதிருப்தி எம்.எல்.ஏக்களை ஜூலை 11 ஆம் தேதிவரை தகுதி நீக்கம் செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு மஹாராஷ்டிரா துணை சபாநாயகர் அனுப்பிய தகுதி நீக்க நோட்டீசை எதிர்த்து திரு.ஏக்நாத் ஷிண்டே சார்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, முதலமைச்சர் திரு. உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆளும் சிவசேனா கூட்டணி அரசுக்கு அளித்த வந்த ஆதரவை திரும்ப பெறுவதாக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தெரிவித்தனர். திரு. உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து, மஹாராஷ்டிரா அதிருப்தி எம்.எல்.ஏக்களை ஜூலை 11 ஆம் தேதிவரை தகுதி நீக்கம் செய்யக்கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க அறிவுறுத்திய நீதிபதிகள், அதிருப்தி எம்.எல்.ஏக்களின் வழக்கில் மஹாராஷ்டிர சட்டப்பேரவை செயலாளர் பதில் அளிக்கவும் உத்தரவிட்டனர். இதனிடையே, சிவசேனா அதிருப்தி அமைச்சர்கள் 9 பேரின் இலாக்காக்களை முதலமைச்சர் திரு. உத்தவ் தாக்கரே பறித்துள்ளார்.