சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத்திற்கு அமலாக்கத்துறை சம்மன் - நில மோசடி விவகாரத்தில் இன்று ஆஜராகுமாறு உத்தரவு

Jun 28 2022 7:54AM
எழுத்தின் அளவு: அ + அ -

சிவசேனா எம்.பி. திரு.சஞ்சய் ராவத்திற்கு சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கு விசாரணைக்காக இன்று நேரில் ஆஜராக வேண்டும் என மத்திய அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

சிவசேனா அமைச்சர் திரு. ஏக்நாத் ஷிண்டே, கட்சி தலைமைக்கு எதிராக ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் அசாமில் உள்ள ஹோட்டலில் முகாமிட்டு உள்ளார். இதற்கிடையே சிவசேனாவை சேர்ந்த சஞ்சய் ராவத் எம்.பி., முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரவாகவும், அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராகவும் கடுமையாக பேசிவருகிறார். இந்தநிலையில் பத்ரா சால் முறைகேடு வழக்கில் சஞ்சய் ராவத்திற்கு அமலாக்கத்துறை திடீரென சம்மன் அனுப்பி உள்ளது. அதில் இன்று விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு உள்ளது. மும்பை கோரேகாவ் பகுதியில் உள்ள பத்ரா குடிசை சீரமைப்பு பணியில் ஈடுபட்ட ஜி.ஏ.சி.பி.எல். நிறுவனம் ஆயிரத்து 39 கோடி மோசடியில் ஈடுபட்டதாகவும், அதில் 100 கோடியை பிரவின் ராவத் என்பவர் சஞ்சய் ராவத் குடும்பத்தினர் உள்ளிட்ட பலரின் வங்கி கணக்கிற்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரிக்க அமலாக்கத்துறை சஞ்சய் ராவத்திற்கு சம்மன் அனுப்பி உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00