ஆபரேஷன் தாமரை மூலம் விலைக்கு வாங்கப்படும் எம்.எல்.ஏ.க்களுக்கு தலா 30 கோடி ரூபாய் பணம் கொடுக்கப்படுகிறது : கர்நாடக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா குற்றச்சாட்டு
Jun 28 2022 7:52AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆபரேஷன் தாமரை மூலம் விலைக்கு வாங்கப்படும் எம்.எல்.ஏ.க்களுக்கு தலா 30 கோடி ரூபாய் பணம் கொடுக்கப்படுவதாக கர்நாடக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நேற்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது, ஆபரேஷன் தாமரை ஜனநாயகத்தை காப்பாற்றுவதாக பா.ஜ.க தலைவர்கள் பேசுகிறார்கள், ஆனால் மஹாராஷ்டிர மாநிலத்தில் அக்கட்சி என்ன செய்து கொண்டிருக்கிறது என கேள்வி எழுப்பினார். மத்திய பிரதேசம், கர்நாடகத்தில் இருந்த அரசுகளை சட்டவிரோதமாக செயல்பட்டு கவிழ்த்தது யார் என கேள்வி எழுப்பிய அவர், ஆபரேஷன் தாமரையை ஆரம்பித்தது யார் என வினவினார். இந்த ஆபரேஷன் தாமரை மூலம் விலைக்கு வாங்கப்படும் எம்.எல்.ஏ.க்களுக்கு தலா 30 கோடி ரூபாய் பணம் கொடுக்கப்படுவாதக குற்றம் சாட்டியுள்ள அவர், பா.ஜ.கவிடம் ஆட்சி அதிகாரம் மற்றும் பணம் ஆகிய இரண்டும் இருப்பதால் எதிர்க்கட்சிகளின் ஆட்சியை கவிழ்ப்பதாக கூறினார்.