பாஜக ஆட்சியில் இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு பெரும் ஆபத்து - ராஜஸ்தானில் நடைபெறும் காங்கிரஸ் மாநாட்டில் சோனியா காந்தி உரை
May 13 2022 5:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாஜக ஆட்சியில் இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும், ஜனநாயகத்துக்கும் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் திருமதி. சோனியா காந்தி விமர்சித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் சிந்தனை அமர்வு கூட்டம் இன்று தொடங்கி மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது. காங்கிரசில் பல்வேறு உட்கட்சி பூசல் நிலவி வரும் சூழலில், 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை மையப்படுத்தி நடைபெறும் இக்கூட்டத்தில் முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. இந்நிலையில், கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ் கட்சி தலைவர் திருமதி. சோனியா காந்தி, மத்திய அரசுக்கு எதிராக பேசும் நபர்கள் மத்திய புலான்ய்வு அமைப்புகள் மூலம் அச்சுறுத்தப்படுவதாகவும், நாட்டின் ஜனநாயத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். தேசத் தலைவர்களை கொன்றவர்கள் இன்று கொண்டாடப்படுவதாகவும், பாஜக ஆட்சியில் இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் விமர்சித்தார். பாஜக, ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் ஏற்படுத்தியுள்ள சிக்கல் தொடர்பாக விவாதிக்கப்பட வேண்டுமென வலியுறுத்திய திருமதி. சோனியாகாந்தி, பொருளாதாரத்தை முன்னேற்றும் வகையில் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும், பாஜக ஆட்சியில் பழிவாங்கும் நோக்கத்துடன் தனியாருக்கு விற்கப்படுவதாக குற்றம்சாட்டினார்.