சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ். பெண் அதிகாரி சஸ்பெண்ட் - ஜார்க்கண்ட் அரசு அறிவிப்பு
May 13 2022 2:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ்., பெண் அதிகாரி பூஜா சிங்கால், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளதாக ஜார்க்கண்ட் அரசு அறிவித்துள்ளது. ஜார்க்கண்டில், சுரங்க துறை செயலராக உள்ள பூஜா சிங்கால், குந்தி மாவட்ட ஆட்சியராக பதவி வகித்தபோது, ஊரக வேலைவாய்ப்பு திட்ட நிதியில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பூஜா சிங்காலை, அமலாக்க துறை, காவலில் எடுத்து விசாரித்து வருகிறது.