கேரளாவில் மேலும் 63 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி - மொத்த பாதிப்பு 591 ஆக உயர்வு
Jan 18 2022 5:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரளாவில் ஒமிக்ரான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 591 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் மேலும் 63 பேருக்கு புதிய வகை கொரோனாவான ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் திருமதி.வீணா ஜார்ஜ் தெரிவித்தா. இதன்மூலம் மொத்த பாதிப்பு 591 ஆக அதிகரித்துள்ளது. இதில் 401 பேர் குறைந்த ஆபத்துள்ள நாடுகளிலிருந்து வந்தவர்கள். மேலும் 101 பேர் அதிக ஆபத்துள்ள நாடுகளைச் சேர்ந்தவர்கள், 70 பேர் தொற்று உள்ளவர்களிடமிருந்தும், 19 பேர் நாட்டின் பிற மாநிலங்களிலிருந்து வந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.