டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தாவில் கொரோனா 3-வது அலை உச்சத்தை அடைந்தது - ஐஐடி கான்பூர் தகவல்
Jan 18 2022 3:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லி , மும்பை மற்றும் கொல்கத்தாவில் கொரோனா 3-வது அலை உச்சத்தை அடைந்துள்ளதாக, ஐஐடி கான்பூர் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவலை கணித ரீதியான கணித்து பல்வேறு தகவல்களை வெளியிட்டு வரும் ஐஐடி கான்பூர் பேராசிரியரான மனீந்திர அகர்வால், ஒமைக்ரான் பரவலால் ஏற்பட்ட கொரோனா 3-வது அலை, டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் உச்சத்தை அடைந்துள்ளதாகவும், குஜராத், ஹரியானா ஆகிய மாநிலங்களில், இந்த வாரத்திற்குள் உச்சத்தை எட்டும் எனவும், குறிப்பிட்டுள்ளார். கொரோனா பரவல் உச்சத்தை அடைந்ததாக நம்புவதற்கு 2 காரணங்கள் உள்ளதாக தெரிவித்துள்ள அவர், ஒமைக்ரான் வைரஸ் எவ்வளவு வேகமாக பரவியதோ அதே வேகத்தில் குறையத் தொடங்கியதே முதல் காரணம் எனத் தெரிவித்துள்ளார். ஒமைக்ரான் மிதமான பாதிப்பையே ஏற்படுத்துவதால், பரிசோதனை செய்ய மக்கள் தயங்குவது 2-வது காரணம் எனவும், தெரிவித்துள்ளார். ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்களில், கொரோனா 3-வது அலை அடுத்த வாரம் உச்சத்தை எட்டும் எனவும், மனீந்திர அகர்வால் கணித்துள்ளார்.