உத்திரப்பிரதேச தேர்தலில் 400 தொகுதிகளில் பா.ஜ.க தோல்வியை தழுவும் - சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கணிப்பு

Dec 8 2021 11:10AM
எழுத்தின் அளவு: அ + அ -
உத்தரப்பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில், ஆளும் பா.ஜ.க. 400 தொகுதிகளில் தோல்வியை தழுவும் என சமாஜ்வாடி கட்சித் தலைவர் திரு. அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து, ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பா.ஜ.க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. எனினும், முதலமைச்சர் திரு. யோகி ஆதித்யநாத் ஆட்சிக்கு, சமாஜ்வாடி கட்சி பெரும் பெரும் சவாலாக உள்ளது. அக்‍கட்சியின் தலைவர் திரு. அகிலேஷ் யாதவ், யோகி அரசை விமர்சித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

அண்மையில் பிரச்சாரத்தில் பேசிய திரு. அகிலேஷ் யாதவ், யோகி ஆட்சியில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மக்கள் கடுமையாக அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால், மக்‍களின் கடும் எதிர்ப்பால், உத்தரப்பிரதேசத்தில் 400 தொகுதிகளிலும் பா.ஜ.க தோல்வியை தழுவும் என்றும் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். மாநிலத்தில் கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு ஆகியவற்றை மேம்படுத்த எந்தவித முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். கடந்த சட்டமன்றத்தேர்தலின்போது 70 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக வாக்‍குறுதி அளித்த பா.ஜ.க. அரசு, தங்களின் வெற்று விளம்பரத்தில் நான்கு லட்சம் வேலை வாய்ப்புகளை மட்டுமே உருவாக்கியுள்ளதாக ஒப்புக்‍கொண்டதாக திரு. அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00