காஷ்மீரில் பனிப்பொழிவு தொடங்கியதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு - புதுப்பிக்கப்பட்டு பொலிவுடன் காட்சி தரும் தால் ஏரி படகுகள்

Dec 8 2021 11:08AM
எழுத்தின் அளவு: அ + அ -
காஷ்மீரில் நிலவும் பனிப்பொழிவை ரசிக்‍க சுற்றுலாப் பயணிகள் அங்கு குவிந்து வருகின்றனர். சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்காக புகழ்பெற்ற தால் ஏரியில் படகு வீடுகள் புதுப்பிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

காஷ்மீரில் குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில் பனிப்பொழிவும் அதிகரித்துள்ளது. பனிப்பொழிவு காலத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வரத் தொடங்கியுள்ளதால் அவர்களுக்காக படகு வீடுகள் சுத்தப்படுத்தப்பட்டு, அலங்கரிக்கப்பட்டு வரவேற்க தயாராக உள்ளன. காஷ்மீரின் குல்மார்க் பகுதியில் நேற்று மைனஸ் 7 டிகிரி குளிர் பதிவானது. இந்த சீதோஷன நிலையை சுற்றுலா பயணிகள் வெகுவாக ரசித்து வருகின்றனர். இதனிடையே உத்தரகாண்ட், இமாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. புகழ்பெற்ற கேதார்நாத் கோயிலை பனி சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் புகழ்பெற்ற தால் ஏரியில் படகு வீடுகள் புதுப்பிக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகளை வரவேற்க பொலிவுடன் காத்திருக்கின்றன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00