நாட்டின் அமைதியை சீர்குலைக்க முயற்சி நடைபெறுகிறது -சாதி மத அடிப்படையில் பிரிவினை தூண்டிவிடப்படுவதாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் குற்றச்சாட்டு

Oct 15 2021 1:14PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாட்டின் அமைதியை சீர்குலைக்க முயற்சி நடைபெறுவதாகவும், சாதி மத அடிப்படையில் பிரிவினைகள் தூண்டிவிடப்படுவதாகவும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் திரு. மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்ட்ரா மாநிலம் நாக்‍பூரில் அமைந்துள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் இன்று விஜயதசமி விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய திரு. மோகன் பகவத், இந்தியாவில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதாகவும், அதனை தடுக்‍க நடவடிக்‍கை எடுக்‍க வேண்டும் என்றும் கேட்டுக்‍கொண்டார். நாட்டில் மக்‍கள் தொகை ஏற்றத்தாழ்வு பெரும் பிரச்சனையாக உள்ளதாகவும், எனவே மக்கள் தொகையை கட்டுப்படுத்த நடவடிக்‍கை எடுக்‍க வேண்டும் என்றும், அடுத்த 50 ஆண்டுகளுக்கான கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

நாட்டின் அமைதியை சீர்குலைக்க முயற்சிகள் நடைபெறுவதால், அமைதியை நிலைநாட்டி தேசத்தை வலுப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். நாட்டின் பிரிவினை என்பது சோகமான வரலாறு என்றும், இழந்த ஒருமைப்பாடு, ஒற்றுமையை மீட்டெடுக்க பிரிவினை வரலாற்றின் உண்மையை இளம் தலைமுறையினர் அறிந்துகொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

தாலிபன்களுக்கு தற்போது சீனாவும், பாகிஸ்தானும் ஆதரவு அளிப்பதாகவும், தாலிபன்கள் மாறினால் கூட பாகிஸ்தான் மாறாது என்றும் தெரிவித்தார். கொரோனா ஊரடங்கிற்கு பிறகு பெரும்பாலும் அனைத்துக் குழந்தைகளும் செல்போனை உபயோகிக்க ஆரம்பித்துவிட்டதால், ஓடிடிகளில் வரும் திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிககளுக்கு வரையறை வேண்டும் என்று திரு. மோகன் பகவத் குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00