பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் ராஜினாமா - காங்கிரஸ் கட்சியால், தான் அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக வேதனை

Sep 18 2021 5:16PM
எழுத்தின் அளவு: அ + அ -
பஞ்சாப் முதலமைச்சராக இருந்த கேப்டன் திரு. அமரிந்தர் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதுதொடர்பான கடிதத்தை அம்மாநில ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோகித்திடம் அவர் வழங்கினார்.

காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் பஞ்சாபில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், அங்கு முதலமைச்சராக உள்ள கேப்டன் திரு. அமரிந்தர்சிங் தரப்புக்கும் காங்கிரஸ் தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்ட திரு. நவ்ஜோத்சிங் சித்து தரப்பினருக்கும் மோதல் போக்கு நிலவியது. இதற்கிடையில், திரு. அமரிந்தர் சிங்கிற்கு எதிராக சில அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கினர். இதையடுத்து இந்த விவகாரத்தில் கவனம் செலுத்திய காங்கிரஸ் கட்சி தலைமை, பஞ்சாப் மாநில எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்த கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிலையில், சண்டிகரில் உள்ள ராஜ்பவனில் அம்மாநில ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோகித்தை நேரில் சந்தித்த திரு. அமரிந்தர்சிங், தனது பதவியை ராஜினாமா செய்வதாக கூறி, அதற்கான கடிதத்தை ஒப்படைத்தார். அதே போல் தனது அமைச்சரவையின் ராஜினாமா கடிதத்தையும் அவர் அளித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00