மும்பையில் நடிகர் சோனு சூட்டுக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனை - 20 கோடி ரூபாய்க்‍கு வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்‍கப்பட்டதாக தகவல்

Sep 18 2021 2:41PM
எழுத்தின் அளவு: அ + அ -
மும்பையில் நடிகர் சோனு சூட்டுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற வருமான வரி சோதனையில், அவர் 20 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்‍கப்பட்டுள்ளதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் முதல் அலையின் போது கடும் நெருக்‍கடிக்‍கு ஆளான மக்‍களுக்‍கு, பாலிவுட் நடிகர் சோனு சூட், தனது சொந்த செலவில் பேருந்துகளை ஏற்பாடு செய்து, அவர்களை சொந்த ஊர்களுக்‍கு அனுப்பி வைத்தார். கொரோனா இரண்டாவது அலையில் ஏற்பட்ட ஆக்சிஜன் தட்டுப்பாடுகளை நீக்‍கவும் உதவி செய்தார். ஏழை மாணவர்கள் பலரின் கல்விக்‍கும் உதவி செய்து வருகிறார். இதையடுத்து, டெல்லி அரசின் மாணவர் வழிகாட்டி தூதராக நடிகர் சோனு சூட் அண்மையில் நியமிக்‍கப்பட்டார்.

இனிடையே, மும்பையிலுள்ள சோனு சூட்டுக்கு சொந்தமான 6 இடங்களில் வருமான வரித்துறையினர் 3 தினங்களுக்கு முன்பு சோதனை நடத்தினர். 3 நாட்களாக சோதனை நடைபெற்றது. இந்நிலையில், சோனு சூட்டுக்கு சொந்தமான இடங்களில் நடத்திய சோதனை குறித்து வருமானவரித்துறை தகவல் அளித்துள்ளது. சோனு சூட், 20 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும், வெளிநாடுகளில் இருந்து பெற்ற நன்கொடையில் முறைகேடு செய்துள்ளதாகவும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00