பெகாசஸ் செயலி தவறாக பயன்படுத்தப்பட்டிருந்தால் நடவடிக்கை எடுப்போம் : இஸ்ரேல் சைபர் பாதுகாப்பு குழுமமான என்.எஸ்.ஓ உறுதி

Jul 25 2021 5:32PM
எழுத்தின் அளவு: அ + அ -
உலகில் மக்கள் நிம்மதியாக உறங்குவதற்கு பெகாசஸ் போன்ற தொழில்நுட்பங்களே காரணம் என இஸ்ரேல் சைபர் பாதுகாப்பு குழுமமான என்.எஸ்.ஓ விளக்கம் அளித்துள்ளது.

இஸ்ரேல் நாட்டின் சைபர் பாதுகாப்பு குழுமத்தின் பெகாசஸ் உளவு செயலி மூலம், இந்தியா உள்பட பல நாடுகளின் முக்கிய தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உளவு பார்க்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பெகாசஸ் செயலியால் உளவு பார்க்கப்பட்டவர்களின் புதிய பட்டியல் வெளிவந்த வண்ணம் இருக்கின்றது. என்.எஸ்.ஓ மீது பல நாடுகள் குற்றச்சாட்டுகளை அடுக்கி வரும் நிலையில், பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து விசாரிக்க இஸ்ரேல் அரசு ஆய்வுக்குழு அமைத்து, விசாரித்து வருகிறது. இந்த நிலையில், பெகாசஸ் போன்ற உளவு செயலிகளால்தான், தீவிரவாதம் உள்ளிட்ட அச்சுறுத்தல்கள் இல்லாமல், உலக நாடுகளில் மக்கள் நிம்மதியாக உறங்குகிறார்கள் என என்.எஸ்.ஓ நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர், தாங்கள் பெகாசஸ் செயலியை இயக்குவதில்லை என்றும், அச்செயலி சேகரிக்கும் விவரங்களையும் சேமித்து வைப்பதில்லை என்றும் தெரிவித்தார். பல நாட்டின் அரசுகளுக்கு தாங்கள் பென்பொருள் வழங்கி வருவதாகவும், ஒருவேளை அது தவறாக பயன்படுத்தப்பட்டிருந்தால் நடவடிக்கை எடுப்போம் என்றும் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00