கேரளாவில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்‍கும் கொரோனா தொற்று - ஒரேநாளில் 18 ஆயிரம் பேர் பாதிக்‍கப்பட்டுள்ளதால் பொதுமக்‍கள் அச்சம்

Jul 25 2021 5:33PM
எழுத்தின் அளவு: அ + அ -
கேரளாவில் புதிய உச்சமாக தினசரி கொரோனா பாதிப்பு, 18 ஆயிரத்தை கடந்துள்ளது.

நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பரவல் குறைந்துவிட்டது. ஆனால், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து காணப்படுகிறது. நாட்டிலேயே கொரோனா பாதிப்பில் கேரளா முதலிடத்தில் இருந்து வருகிறது. அதன்படி ஒரேநாளில் 18 ஆயிரத்து 531 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 98 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 15 ஆயிரத்து 507 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். தற்போதைய நிலவரப்படி, ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 124 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். பக்ரீத் பண்டிகைக்காக கேரள அரசு தளர்வுகள் அளித்திருந்த நிலையில், கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது.

கேரளாவில் மேலும் இருவருக்கு ஜிகா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது. இதில் 5 பேர் மட்டும் சிகிச்சையில் இருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் திருமதி.வீணா ஜார்ஜ் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00