புதுச்சேரியில் வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு - சிசிடிவி மூலம் 24 மணிநேரம் கண்காணிப்பு
Apr 8 2021 5:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரியில் பதிவான வாக்குகளைக் கொண்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரிகளுக்கு, மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரியில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், 30 தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீலிடப்பட்டு, லாஸ்பேட்டை, காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளில் உள்ள வாக்கு எண்ணும் மையமான அரசு கல்லூரி மற்றும் பள்ளிகளில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களுக்கு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.