அசாமில் முழு ஊரடங்கிற்கோ, இரவு நேர ஊரடங்கிற்கோ வாய்ப்ப்பில்லை - சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா பேட்டி
Apr 8 2021 3:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அசாம் மாநிலத்தில் முழு ஊரடங்கிற்கோ, இரவு நேர ஊரடங்கிற்கோ வாய்ப்ப்பில்லை என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் திரு.ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து பல்வேறு மாநில அரசுகள், கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. அதன்படி, கொரோனா தொற்று அதிகமுள்ள மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து அசாம் மாநிலத்திற்கு வருகை தரும் பயணிகள், கட்டாய கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் திரு.ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் அதிகரிப்பதைக் கண்டு பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை எனத் தெரிவித்துள்ள அவர், கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் கட்டாயம் பரிசோதனை செய்துகொள்ள வேண்டுமெனவும், கேட்டுக்கொண்டார். அசாமில் முழு ஊரடங்கிற்கோ, இரவு நேர ஊரடங்கிற்கோ வாய்ப்பில்லை எனத் தெரிவித்த திரு.ஹிமந்த பிஸ்வா சர்மா, பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருந்தாலே போதுமானது எனத் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு, நாளை முதல் வரும் திங்கட்கிழமை வரை அனைத்து நகர்ப்புறங்களிலும் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு விதிக்கப்படுவதாக, முதலமைச்சர் திரு.சிவராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டுள்ளார்.