கொரோனா பரவல் அதிகரிப்பால் ஊரடங்கு அச்சம் - லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் மீண்டும் சொந்த ஊர் திரும்பும் அவலம்

Apr 8 2021 12:51PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா பரவல் மீண்டும் தீவிரமடைந்திருப்பதை அடுத்து, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் மீண்டும் சொந்த ஊர்களுக்கு திரும்ப தொடங்கியுள்ளனர்.

டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் கொரோனா 2வது அலை வேகமெடுத்துள்ளதால் அந்நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இதனால் அச்சமடைந்த உத்திரப்பிரதேசம், பீகார், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தாங்கள் பணிபுரியும் பகுதிகளிலிருந்து மீண்டும் சொந்த ஊர் திரும்ப தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக டெல்லியில் உள்ள ரயில் நிலையங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

மீண்டும் ஊரடங்கு போடப்பட்டதன் காரணமாக, வேலை வாய்ப்பு கிடைக்காதததோடு, தொற்று பரவல் அச்சமும் இருப்பதால் பலர் சொந்த ஊர் திரும்ப தொடங்கியுள்ளனர். மும்பை, புனே உள்ளிட்ட நகரங்களில் இருந்து வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பி வருகின்றனர். புனே ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மூட்டை முடிச்சுகளுடன் திரண்டதால் ரயில்வே நிர்வாகம் கொரோனா தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அவர்கள் அனைவருக்கும் முகக்கவசம், கையுறை, கிருமி நாசினி போன்றவை வழங்கப்பட்டன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00