பாலியல் வன்கொடுமை வழக்கில், பாதிக்‍கப்பட்ட பெண்ணை குற்றம் சாட்டப்பட்ட நபர் திருமணம் செய்துகொள்ள தயாரா என கேட்கவில்லை - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே விளக்‍கம்

Mar 8 2021 1:24PM
எழுத்தின் அளவு: அ + அ -
பாலியல் வன்கொடுமை வழக்கில், பாதிக்‍கப்பட்ட பெண்ணை குற்றம் சாட்டப்பட்ட நபர் திருமணம் செய்துகொள்ள தயாரா என, தான் கேள்வி எழுப்பவில்லை என்று உச்சநிதிமன்ற தலைமை நீதிபதி திரு.எஸ்.ஏ.பாப்டே விளக்‍கம் அளித்துள்ளார்.

மஹாராஷ்ட்ராவில் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அரசு ஊழியரின் முன்ஜாமீன் மனு, கடந்த வாரம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம் சாட்டப்பட்டவரைப் பார்த்து, பாதிக்‍கப்பட்ட பெண்ணை திருமணம் செய்துகொள்ள தயாரா? அதற்கு தயார் என்றால், மனுவை பரிசீலிக்கிறோம். இல்லாவிடில், தாங்கள் சிறைக்‍கு செல்லவேண்டி இருக்‍கும் என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே கூறியதாக தகவல் வெளியானது. இந்த கருத்துகள் நாடு முழுவதும் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தலைமை நீதிபதி திரு.பாப்டே, தனது கருத்தை திரும்ப பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் திருமதி. பிருந்தா காரத் அவருக்‍கு கடிதம் எழுதினார். இந்நிலையில், தான் அவ்வாறு கேள்வி எழுப்பவில்லை என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு.எஸ்.ஏ.பாப்டே விளக்‍கம் அளித்துள்ளார். தான் கூறியதாக தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளதாகவும், பெண்கள் மீது உயர்ந்த மரியாதை வைத்துள்ளதாகவும் திரு.பாப்டே கூறியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00