வேளாண் சட்டங்களுக்‍கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் பெண்கள் தலைமையில் போராட்டம் - அடக்‍குமுறைக்‍கு எதிராக குரல் எழுப்ப முன்வர வேண்டும் என அழைப்பு

Mar 8 2021 1:23PM
எழுத்தின் அளவு: அ + அ -
அடக்‍குமுறைக்‍கு எதிராக குரல் எழுப்ப பெண்கள் முன்வர வேண்டும் என, டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு தலைமை ஏற்றுள்ள பெண்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வலியுறுத்தி, தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 100 நாட்களை கடந்தும் தொடர்ந்து வருகிறது. போராட்டத்தைக்‍ கைவிட விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 11 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வி அடைந்துள்ளன. இதனிடையே, புதிய வேளாண் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய வேளாண் அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ள நிலையில், புதிய வேளாண் சட்டங்கள் முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியுடன் உள்ளனர். இந்நிலையில், மகளிர் தினத்தை முன்னிட்டு, புதிய வேளாண் சட்டங்களுக்‍கு எதிரான டெல்லி விவசாயிகளின் போராட்டத்திற்கு பெண்கள் தலைமை ஏற்றுள்ளனர். டெல்லி-ஹரியானா எல்லையில் உள்ள திக்ரி பகுதியில் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் குவிந்துள்ளனர். அடக்‍குமுறைக்‍கு எதிராக குரல் எழுப்ப பெண்கள் முன்வர வேண்டும் என போராட்டத்தில் பங்கேற்றுள்ள பெண்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00