இந்தியாவும், சீனாவும் நண்பர்கள் - இருவரும் வெற்றிக்காக பஸ்பரம் ஒத்துழைக்க வேண்டும் - சீன வெளியுறவு அமைச்சகம் விருப்பம்

Mar 8 2021 8:34AM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தியாவும், சீனாவும் நண்பர்கள் என்றும், இருவரும் வெற்றி பெற ஒருவருக்‍கு ஒருவர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கிழக்கு லடாக்கில் கடந்த ஆண்டு மே மாதம் ஏற்பட்ட பதற்றம், அதைத் தொடர்ந்து நடைபெற்ற வன்முறை மோதல், எல்லையில் இரு நாட்டு படைகள் குவிப்பு என்று இந்திய-சீன உறவில் விரிசல் ஏற்பட்டது. இரு நாட்டு உறவில் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்க பலகட்ட பேச்சுவார்த்கைள் நடைபெற்றன. இதனைத்தொடர்ந்து, கிழக்‍கு லடாக்‍ எல்லையில் குவிக்‍கப்பட்டிருந்த இரு நாட்டு படைகளும் விலக்‍கிக்‍கொள்ளப்பட்டன. இந்நிலையில், இந்தியாவும், சீனாவும் நண்பர்கள் என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹூவா சுனிங் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இந்தியாவும், சீனாவும் எதிரிகள் அல்ல என்றும், நண்பர்கள் என்றும் தெரிவித்துள்ளார். இருவருமே வெற்றி பெற ஒருவருக்‍கு ஒருவர் ஒத்துழைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00