மகாராஷ்ட்ராவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல் - ஒரேநாளில் 11 ஆயிரத்து 141 பேருக்கு புதிதாக தொற்று
Mar 8 2021 8:13AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்று ஒரேநாளில் 11 ஆயிரத்து 141 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக, தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் அண்மைக்காலமாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 18 ஆயிரத்து 711 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டதாகவும், 100 பேர் கொரோனாவால் உயிரிழந்ததாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில், 84 புள்ளி 7 சதவீத பாதிப்புகள் மகாராஷ்ட்ரா, கேரளா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத், தமிழ்நாடு ஆகிய 6 மாநிலங்களில் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மகாராஷ்ட்ரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு பத்தாயிரத்தை தாண்டி பதிவாகிறது. நேற்று ஒரேநாளில் 11 ஆயிரத்து 141 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் 38 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருந்தொற்று குறித்த அச்சமில்லாமல் பொதுமக்கள் கூடுவதே, மகாராஷ்ட்ராவில் கொரோனா பரவலுக்கு காரணம் என மருத்துவ நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.