மத்திய அரசின் வேளாண் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தால் டெல்லியில் துணை ராணுவப்படை குவிப்பு - ஹரியானா - டெல்லி எல்லையில் கண்ணீர் புகை குண்டுகளால் விவசாயிகளை விரட்டிய போலீஸ்

Nov 27 2020 10:28AM
எழுத்தின் அளவு: அ + அ -
மத்திய அரசின் வேளாண் சட்டத்துக்கு எதிராக, தலைநகர் டெல்லியை நோக்கி ஹரியானா, பஞ்சாப் விவசாயிகள் மீண்டும் மாபெரும் பேரணியை தொடங்கி இருப்பதால், எல்லையில் முள்கம்பி வேலி அமைக்கப்பட்டு துணை ராணுவப்படை குவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றிய புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, பஞ்சாப் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டங்களின் ஒரு பகுதியாக, டெல்லி நோக்கி பேரணியாக, ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் வாகனங்களில் நேற்று டெல்லி நோக்கி புறப்பட்டனர். பேரணியாக வந்த பஞ்சாப் விவசாயிகளை, ஹரியானா எல்லையில் அம்மாநில போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது விவசாயிகள் தடுப்புகளை மீறி முன்னேற முயன்றதால் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீர் பீய்ச்சி அடித்தும் விவசாயிகளை தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியே போர்க்‍களம் போல் காட்சியளித்தது. இதனைத்தொடர்ந்து, முன்னெச்சரிக்‍கை நடவடிக்‍கையாக, Haryana-Delhi எல்லையில் உள்ள நெடுஞ்சாலைகளும் Rohtak-Jhajjar நெடுஞ்சாலையும் மூடப்பட்டன. மேலும் டெல்லி மெட்ரோ ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. டெல்லியை யொட்டிய சிங்கு எல்லையில் துணை ராணுவப்படை குவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வேளாண் சட்டங்கள் தொடர்பான வேறுபாடுகளை தீர்க்க மத்திய அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமா், பேச்சுவார்த்தைக்கு வரும்படி விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். விவசாயிகளின் சிக்கல்களை பற்றி பேசவும், வேறுபாடுகளை தீர்க்கவும் மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் திரு. நரேந்திர சிங் தோமர் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00