அரசின் சேவைகளைப் பெறுவதற்கு லஞ்சம் புழங்கும் நாடுகளில் ஆசியாவிலேயே இந்தியாவுக்கு முதலிடம் - சர்வதேச அளவிலான ஆய்வில் தகவல்

Nov 27 2020 12:45PM
எழுத்தின் அளவு: அ + அ -
அரசின் சேவைகளைப் பெறுவதற்கு லஞ்சம் புழங்கும் நாடுகளில் ஆசியாவிலேயே இந்தியாதான் முதலிடத்தில் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஆசிய நாடுகளில் புழக்கத்தில் உள்ள லஞ்ச விகிதம் குறித்து 'Transparency International' என்ற அமைப்பு ஆய்வு நடத்தியது. இந்தியாவில் கடந்த ஜூன் மாதம் 17-ஆம் தேதி முதல் ஜூலை மாதம் 17-ஆம் தேதி வரை 2,000 பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வறிக்கையில், ஆசியாவில் அரசின் சேவைகளைப் பெறுவதற்கு லஞ்சம் கொடுப்பது அதிகமாகக் காணப்படும் நாடுகளில் இந்தியா 39 சதவீதத்துடன் முதலிடத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது. சேவைகளைப் பெறுவதற்கு லஞ்சம் கொடுத்தோரில் 50 சதவீதம் போ் அதிகாரிகளின் வற்புறுத்தல் காரணமாகவே லஞ்சம் கொடுத்ததாகவும், 32 சதவீதம் போ் உயரதிகாரிகளுடன் கொண்டுள்ள தொடா்பை அடிப்படையாகக் கொண்டு அரசின் சேவைகளைப் பெற்றதாகவும் ஆய்வு கூறுகிறது. ஊழல் குறித்து புகார் தெரிவித்தால் அதற்கான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று 63 சதவீத இந்தியா்கள் அச்சம் கொண்டுள்ளனா் என்பதும் தெரியவந்துள்ளது.

ஆசியாவில் லஞ்சம் அதிகம் காணப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவைத் தொடா்ந்து கம்போடியா, இந்தோனேசியா ஆகியவை உள்ளன. மாலத்தீவுகள், ஜப்பான் நாடுகளில் குறைந்த அளவில் லஞ்சம் புழங்குவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00