தமிழகத்தில் இருந்து காய்கறிகளை நேரடியாக கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள்

Oct 27 2020 11:14AM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் இருந்து காய்கறிகளை நேரடியாக கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என கேரள முதலமைச்சர் திரு. பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

இதுகுறித்து தமிழக முதலமைச்சருக்‍கு, கேரள முதலமைச்சர் திரு. பினராயி விஜயன் எழுதியுள்ள கடிதத்தில், கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை கடுமையாக அதிகரித்து வருகிறது - எனவே விலை உயர்வை கட்டுப்படுத்தவும், பொதுமக்கள் நலனை காக்கவும் கொள்முதல் மூலமாக அரசு இவ்விஷயத்தில் தீர்வு காண முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கேரளாவை பொறுத்த வரை, காய்கறி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் விநியோகத்தில் மற்ற மாநிலங்களையே அதிகம் சார்ந்துள்ளது என அவர் சுட்டிக்‍காட்டியுள்ளார். எனவே, தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு நேரடியாக காய்கறிகளை கொள்முதல் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். வெங்காயம், தக்காளி மற்றும் உருளை ஆகியவற்றை விவசாயிகளிடம் இருந்தும், வியாபாரிகளிடம் இருந்தும் கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று திரு.பினராயி விஜயன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00