நாட்டிலேயே முதல் மாநிலமாக வரும் 1ம் தேதி முதல், திரையரங்குகளை திறக்க, மேற்கு வங்க அரசு அனுமதி - கடுமையான கட்டுப்பாடுகளை பின்பற்ற நடவடிக்கை

Sep 27 2020 3:40PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாட்டிலேயே முதல் மாநிலமாக வரும் 1-ம் தேதி முதல், கட்டுப்பாடுகளுடன் திரையரங்குகளை திறக்க, மேற்கு வங்க மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

கொரோனா தடுப்பு ந‌டவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த ஆறு மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. அவ்வப்போது ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தாலும், திரையரங்குகள் மட்டும் இன்னும் திறக்கப்படவில்லை. இந்நிலையில், நாட்டிலேயே முதல் மாநிலமாக, வரும் 1-ம் தேதி முதல், கட்டுப்பாடுகளுடன் திரையரங்குகளை திறக்க, மேற்கு வங்க முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பான அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இயல்பு நிலைக்கு திரும்பும் நோக்கில், திருவிழாக்கள், இசை, நடனம் மற்றும் மேஜிக் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளோடு விளையாட்டு அரங்குகளை திறக்கவும் அனுமதி அளிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளார். அதே சமயம், திரையரங்குகள் மற்றும் குறிப்பிட்ட நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மிகாமல் பங்கேற்பதோடு, முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது போன்ற கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00